• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்சி – காட்டுப்புத்தூரில் நடைபெறும் திட்டப்பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு

ByJawahar

Jan 21, 2023

திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021 – 2022 திட்டத்தின் கீழ் ரூ.334.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் வாரசந்தை மேம்பாட்டு பணி, ரூ.144.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் எரிவாயு தகனமேடை அமைத்தல் பணி, ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் ந நடைப்பெற்று வரும் கருங்காட்டு குட்டை மேம்பாட்டு பணி, நபார்டு 2021 – 2022 திட்டத்தின் கீழ் ரூ.81.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் ஆண்டாபுரம் மெயின் ரோடு முதல் மயானம் வரை தார்சாலை அமைத்தல் பணி, திடக்கழிவு மேலாண்மை திட்டம் SBM 2.0 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.44.72 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பழைய குப்பைகளை தீர்வு செய்தல் பணி, 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் நடைப்பெற்று வரும் பல்வேறு பணிகள் ஆகியவற்றை மண்டல செயற்பொறியாளர் திரு.கருப்பையா நேரடி ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கைளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது திருச்சிராப்பள்ளி மாவட்ட உதவி செயற்பொறியாளர் திரு.திருமலைவாசன், செயல் அலுவலர் திரு.ச.சாகுல் அமீது, இளநிலை உதவியாளர் இராஜேந்திரன், இளநிலை செயற்பொறியாளர் இரமேஷ், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கண்ணன், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்