• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மேற்கத்திய நாடுகளில் இசை கச்சேரி நடத்தும் யுவன்சங்கர்ராஜா

Byதன பாலன்

Mar 29, 2023

சமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஏப்ரல் 1 முதல் 7 வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ஐரோப்பாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தவுள்ளார்.

“ஹை ஆன் யுவன் – லைவ் இன் ஐரோப்பா” என்ற தலைப்பில், ஃபாக்ஸ் (Foxx), நிமா (Nima) மற்றும் ஃபிரேம் (Frame) ஆகியவை யு1 ரிகார்ட்ஸ் உடன் இணைந்து இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. ஃபோன்கேர் (Phonecare), அகிலம் (Agilam), கரிகாலா (Karikaala) சொக்கா (Sokka) மற்றும் ஆர்ட் டெகோ பிரஸ் (Art Deco Press) ஸ்பான்சர்களாக உள்ள நிலையில், லண்டனுக்கான‌ மீடியா பார்ட்னராக ஏஜேஎஸ் ஈவென்ட்ஸ் (AJS Events) உள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி ஓபர்ஹவுசனிலும், ஏப்ரல் 2 அன்று பாரிஸிலும், ஏப்ரல் 7 அன்று லண்டனிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். highonu1.com எனும் பிரத்யேக இணையதளத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், பிரேம்ஜி, ச‌ங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், ஆண்ட்ரியா ஜெரிமியா, தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து “ஹை ஆன் யுவன்” நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜாவின் பிரபல‌ பாடல்கள் இந்த நிகழ்வுகளின் போது இசைக்கப்பட்டு, பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் பலர் யுவனின் ரசிகர்களாக இருப்ப‌தால், இந்நாடுகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ரசிகர்களுக்கு இசை விருந்தாக இந்த நிகழ்ச்சிகள் அமைவதை உறுதிசெய்ய, விரிவான ஏற்பாடுகளை செய்யபட்டு வருகின்றன. யுவனின் நேரலை நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்கான ரசிகர்களின் நெடுநாள் கனவு இதன் மூலம் நிறைவேற உள்ளது.