• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தெலுங்கு மொழி பேசும் இனமக்கள் ஆண்டிபட்டியில் யுகாதி திருநாள் கொண்டாட்டம்.

ByJeisriRam

Apr 21, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கம்மவார் உறவின்முறை சார்பாக தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் கொண்டாட்டம் மற்றும் விருந்து சிறப்பாக நடைபெற்றது.

அதனை முன்னிட்டு முன்னதாக ஆண்டிபட்டி மையப்பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாப்பம்மாள்புரம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகளான பரதம், கோலாட்டம் , ஒயிலாட்டம், கரகம், சிலம்பம் மற்றும் ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் 2023 – 24 ஆண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து யுகாதி விருந்து அளிக்கப்பட்டது.

விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தெலுங்கு பேசும் இன மக்கள் கலந்து கொண்டனர்.