கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி, குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு, முந்தல் சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து கிருமிநாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புலாவில் உள்ள வாத்து, கோழிப்பண்ணைகளில் பறவைகள் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கேரளா எல்லைப்பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு வழியாக தமிழக பகுதிகளுக்கு வரும் வாகனங்களை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டும் தமிழகப்பகுதிகளுக்குள் அனுமதித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகள் மற்றும் கோழி தீவனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு மலைச்சாலைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.