பண மோசடி வழக்கு தொடர்பாக யூடிபர் சவுக்கு சங்கர் கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜரானார். கரூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஆன்லைனில் அறிமுகமான சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தான் யூடியூப்பர் சவுக்கு சங்கரிடம் வேலை பார்ப்பதாகவும் ஆன்லைனில் வர்த்தகம் செய்ய குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ. 7 லட்சம் பணத்தை கடந்த ஆண்டு கிருஷ்ணமூர்த்தியிடம் விக்னேஷ் வாங்கியுள்ளார்.

இந்தப் பணம் அனைத்தும் யூடிபர் சவுக்கு சங்கரிடம் கொடுத்து விடுவதாகவும் அவர் மூலம் உங்களுக்கு முதலீடு செய்ததில் கிடைத்த லாபத்தில் வரும் பணம்அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் முதலீடு செய்து மூன்று மாதங்களாகியும் லாபத்தையும் கொடுக்காமல் முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் விக்னேஷ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி விக்னேஷிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது விக்னேஷ் கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி கரூர் நீதிமன்றம் ஜேஎம்.1-ல் யூடிபர் சவுக் சங்கர் மற்றும் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக விக்னேஷும், சவுக்கு சங்கரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் யூடிபர் சவுக்கு சங்கர் புதன்கிழமை காலை கரூர் குற்றவியில் நடுவர் நீதிமன்றம் ஜே.எம்.-1ல் நீதிபதி பரத்குமார் முன் ஆஜரானார்.











; ?>)
; ?>)
; ?>)