மதுரை கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியில் சேர்ந்த பாண்டியராஜன் இவரது மகன் அரசு (வயது 18) பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டியும் அரசுவும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காதல் பிரச்சினை தொடர்பாக அரசு அழகுபாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணமாக அழகு பாண்டியின் அண்ணன் செல்லப்பாண்டியன் நேற்று அரசுவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது சம்பவ இடத்திலேயே மரணமடைந்த அரசின் உடலை சிலைமான் போலீசார் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை வழக்கு குறித்து செல்ல பாண்டியன் உள்ளிட்ட சிலரை சிலைமான் போலீசார் தேடி வருகின்றனர்.