மதுரை மாவட்டம், திடீர் நகர் பகுதியில் இளைஞர் ஒருவரை படுகொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாநகர் திடீர் நகர் சந்தன மாரியம்மன் கோவில் அருகே வசிக்க கூடிய ராமசுப்பிரமணி (வயது 32) என்பவர் மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு பயணிகளை அனுப்பிவைக்கும் முகவராக பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவரை திடீரென அங்கு மர்ம நபர்கள் சிலர் அவரை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் திடீர்நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து, இளைஞரை கொலை செய்து தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகரில் இளைஞர் படுகொலை
