• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நாய் குறுக்கே புகுந்ததால் இளைஞர் பலி..,

ByK Kaliraj

Aug 6, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள இறவார்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது45) இவர் தனியார் பட்டாசு ஆலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

பட்டாசு ஆலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் இறவார்பட்டியில் இருந்து சிவகாசிக்கு சென்ற போது மண்குண்டாம் பட்டி அருகே தீடீரென குறுக்கே நாய் புகுந்ததால் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இது குறித்து ரமேஷின் மகன் வீரக்குமார் (வயது19) கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.