கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் போப் பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போப் பிரான்சிஸ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாநிதி, சிவகணேஷ், மாவட்ட செயலாளர் முரளி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சமீர், தெற்கு தொகுதி தலைவர் முஜிபுரகுமான், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பெருமாள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.