• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் அருகே இளைஞர் அடித்து கொலை!!

ByRadhakrishnan Thangaraj

Mar 12, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் வயது 35 மாரியப்பனுக்கும் தங்கமாரி என்பவருக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்

மாரியப்பன் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாத காரணத்தினால் தங்கமாரி கடந்த ஆறு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மாரியப்பன் பாட்டில்கள் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு தொட்டியபட்டி அருகே உள்ள அழகாபுரி பகுதியில் மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். .

இந்த சம்பந்தமாக இராஜபாளையம் வடக்கு காவல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் வளர்மதி உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர் .

குறியாக கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மாரியப்பனின் நண்பர் சோலைராஜா காமராஜபுரம் பகுதியில் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் இந்த நிலையில் நெருங்கி பழகிய நண்பனான மாரியப்பனையும் மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர் இந்த இரண்டு கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.