திண்டுக்கல் அருகே வாலிபரை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த செந்தில்(27). இவரை வேடசந்தூர் லட்சுமணன் பட்டியைசேர்ந்த முத்துக்குமார்(24) என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இது குறித்து மாவட்டத்தில் பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் DSP.பவித்ரா தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் நிதிக்குமார் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்த முத்துக்குமாரை கைது செய்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





