திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக அம்பாத்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுபத்ரா தலைமையில் அம்பாத்துறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் காவலர்கள் கங்காதரன், அந்தோணிபீட்டர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த அகமதுயாசின் என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.







; ?>)
; ?>)
; ?>)