கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் என்பவர் உடன் பழகி வந்தார்.

இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசி அவரை கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ பதிவு செய்து இருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியை அடைந்த அந்த இளம் பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை தரகுறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்கை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.











; ?>)
; ?>)
; ?>)