• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

நண்பரின் தந்தை தாக்கப்பட்டத்தை தட்டிகேட்க இளைஞர் குத்திகொலை

By

Sep 12, 2021 ,

மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன். எச்.எம்.எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அங்கு தனியார் சித்தா மருத்துவமனை கட்டுமானத்திற்காக கொட்டிய ஜல்லி, மணல் பக்கத்து வீட்டில்  வசிக்கும் ஆசாரி கணேசன் வாசல் முழுவதும் பரவியுள்ளது.  இதனால் அவர் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆசாரி கணேசன் மகன் அருண் பிரகாஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வரும் கணேசனிடம் வீட்டு வாசல் வரை ஏன் ஜல்லி மணல் கொட்டுக்கிறீர்கள் எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ் வாட்ச்மேன் கணேசனை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கணேசன் தனது மகன் கௌதமிடம் செல்போன் மூலம் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கௌதம் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை பார்க்கும் தனது நண்பன் விக்னேஷ் உள்ளிட்ட சிலருடன் சென்று சம்பவ இடத்தில்   தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ் வீட்டில் இருந்த கத்தியால்

விக்னேஷை  சரமாரியாக தாக்கியதில்  ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு

அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார், அருண்பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.