இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு விருது வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் மிக பிரம்மாண்டமான முறையில் உலக தரத்துடன் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஐந்து திரைகளுடன் கூடிய பிரம்மாண்டமான அருணோதயா மால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில், அருணோதயா திரையரங்கிலும் இந்த படமானது வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அங்கு படம் பார்க்க வருகை தந்த மருத்துவர்கள் அருணோதயா மாலின் உரிமையாளரான தமிழ்செல்வனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் சங்கம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கிய கௌரவித்தனர். நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ சங்கத் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஆனந்த், துணைத்தலைவர் செந்தில்குமரன், முன்னாள் தலைவர்கள் செல்வராஜ், குணசேகரன் உள்ளிட்ட மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
