• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இனி சாதாரண பட்டன் போன் மூலமாகவும் பணம் அனுப்பலாம்

சாதாரண பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்த யுபிஐ வசதிக்கு ‘123 பே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான ஆன்லைன் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக புதிய பிரத்யேக யுபிஐ வசதியை அறிமுகம் செய்யதுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான தகவல்களை பெற பிரத்யேக திட்டமும் தொடங்கப்படும் என்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இந்த யுபிஐ சேவைகள் பெரிதும் பயனளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ‘123 பே’ யுபிஐ வசதியின் மூலம் ரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அடைய முடியும் என்றும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். இந்த புதிய முறையில் இணைய வசதி இல்லாமலேயே பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.