• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கதாநாயகனாக யோகிபாபு! இயக்கப்போவது யார்?

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார்.

இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வடிவேலு நடிக்க மறுத்த நிலையில், அந்த படம் கைவிடப்பட்டது..

இந்நிலையில் சிம்புதேவன் அடுத்து தான் இயக்கப்போகும் கதையில் யோகி பாபுவை கதாநாயகனாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே யோகி பாபு தர்மபிரபு மற்றும் மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து அவை வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.