• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பெண் வேடத்தில் யோகிபாபு புகைப்படங்கள் வைரல்

Byவிஷா

May 8, 2025

நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு பெண் வேடத்தில் நடித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.
விஜய் சேதுபதி – ருக்மிணி வசந்த் நடித்துள்ள திரைப்படம் ஏஸ். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
ஏஸ் திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள யோகி பாபுவின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் யோகி பாபு பெண் வேடம் அணிந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.