விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.சார்பு நீதிபதி சண்முகவேல்ராஜ் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து யோகாசனம் துவக்கி வைத்தனர்.

யோகா மாஸ்டர்கள் ஆனந்த செல்வி, முருகேசன் ஆகியோர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு யோகாசனம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க உரையாற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.