புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்ட உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலனின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 – லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு பகுதி நேர நூலகத்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் புத்தக எழுத்தாளர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து அகிலனின் படத்தை திறந்து வைத்தனர்

இந்நிகழ்வில் அரசு மாவட்ட நூலக அலுவலர் காரல்மார்க்ஸ் பொது நூலகர் ராமசாமி திமுக ஒன்றிய செயலாளர் சாமிநாதன் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VNM.பாலு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எஸ்.முத்துலட்சுமி சாமியய்யா ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.