• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை..,

Byரீகன்

Sep 5, 2025

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் தலைமையில்
சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், ந.செந்தில், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட – மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .