கோடைகாலத்தில் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்க தர்ப்பூசணி விருப்பமான பழவகையாகும். நீர்சத்து மட்டுமல்ல அதன் இனிப்பான சுவையும் அனைவரும் விரும்பி உண்ணும் பழவகையாக தர்பூசணி இருக்கிறது. தர்ப்பூசணியின் சுவை கசப்பானதாக இருந்திருக்கலாம் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6000 ஆண்டுகளுக்கு முன் விளைந்த தர்ப்பூசணிப் பழங்கள் கசப்புச் சுவை கொண்டதாகவும் உட்கொண்ட மனிதர்களுக்கு மரணம் விளைவிக்கக்கூடியதாகவும் இருந்திருக்கும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.நமது முன்னோர்கள் பழத்தின் சிவந்த சதை பகுதியை நீக்கிவிட்டு விதைகளை மட்டும் உண்டார்கள். தானாக விளைவதிலிருந்து விவசாயத்திற்கு மாற்றப்படும்போது பழங்கள் தங்களது சில இயல்புகளை இழக்கின்றன.அது போல் தர்பூசணியின் கசப்பு சுவை மாறியிருக்கும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
தர்ப்பூசணியின் சுவை கசப்பாக இருந்தது என்றால் நம்புவீர்களா?






; ?>)
; ?>)
; ?>)
