உசிலம்பட்டியில் தேமுதிக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு தேமுதிக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் உசிலம்பட்டி நகர செயலாளர் அசோகன் ,உசிலை ஒன்றிய செயலாளர் ஒய். எஸ் .டி. சமுத்திரபாண்டி, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஏழுமலை பேரூராட்சி செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் எம். எஸ். பாண்டியராஜன், வாசக ராஜா, அழகு ராஜா, காசிமாயன், மகளிர் அணி பாண்டியம்மாள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.