• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தவெக மாநாடு வெற்றியடைய தங்கத்தேர் இழுத்து வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Aug 15, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தவெக மாநாடு வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மதுரையிலே முகாமில் இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக நடைபெற திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.

தொடர்ந்து கோவிலுக்குள் இருந்த வாராகி அம்மன் முன்பு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.