• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆர்.பி.உதயக்குமார் கருப்பசாமி கோவிலில் வழிபாடு..,

ByP.Thangapandi

Jul 13, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், கலந்து கொண்டு தோப்பு கருப்பசாமி கோவிலில் வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ வும் ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி, கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ விமான ஐ.மகேந்திரன், மாநில அம்மா பேரவை துணைச்செயலாளருமான துரைதனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி,நகர செயலாளர் பூமாராஜா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.