உலகம் முழுவதும் யோகா தினம் இன்று மிகசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர். இந்த யோக தினத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் வசந்தராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று மாணவர்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த யோக தினம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது :-
போதை பொருட்களால் இன்றைய இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுக்க இந்த அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை எனக் கூறினார். மேலும் இந்த போதை பொருளை முற்றிலும் தடுக்க வேண்டுமென்றால் ஆட்சி மாற்றமே ஒரே வழி எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மேலும் யோகா தினம் குறித்து பேசிய பிருந்தாவன் வித்யாலயா பள்ளி தாளாளர் வசந்தராஜன் பேசும் போது, இன்று யோகாவின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு போய் சேர்த்துள்ளதாக தெரிவித்தார். மேலும் யோகா குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பாக பெண்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.