ரோட்டரி மாவட்டம் 3234, போலியோவை ஒழிக்கும் தன் உறுதியான முயற்சியை வெளிப்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ நிலையங்களிலெல்லாம் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

இதன் முக்கிய நிகழ்ச்சி ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆளுநர் ஏ.கே.எஸ். ரோட்டேரியன் வினோத் சரோகி மற்றும் மாவட்ட போலியோ குழு இதை முன்னெடுத்தனர்.
இம்முகாம் சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டெட் (CMRL) உடன் இணைந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. எஸ். அசோக் குமார், IRSE, முதன்மை பொது மேலாளர் – தடம் மற்றும் உயர்நிலை கட்டுமானம், சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டெட் (CMRL) கலந்து கொண்டார். அவருடன் முன்னால் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் என். எஸ். சரவணன் மற்றும் மாவட்ட தலைவர் – போலியோ, ரோட்டேரியன் ஜி. பழனி, முகாமின் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
தனது உரையில் ரோட்டேரியன் வினோத் சரோகி கூறியதாவது: “போலியோவை உலகளவில் முற்றிலும் ஒழிப்பதே ரோட்டரியின் நீண்டகால இலக்கு. ரோட்டரியின் End Polio முயற்சி பலரையும் ஒன்றிணைத்து செயல் பட தூண்டுகிறது. இன்று நடைபெறும் விழிப்புணர்வு முகாம், ஒவ்வொரு குழந்தையையும் இந்தத நோயிலிருந்து பாதுகாக்கும் எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
முகாமின் போது ஆலந்தூர், கிண்டி மற்றும் சென்ட்ரல் மெட்ரோ உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் பயணிகளுக்காக தகவல் மையங்கள், போஸ்டர்கள் மற்றும் தன்னார்வ பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் நோக்கம் — தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது மற்றும் உலகம் முழுவதும் போலியோ ஒழிக்கப்படும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைக் நினைவூட்டுவது.
ரோட்டேரியன் ஜி. பழனி நன்றி தெரிவித்து, “எந்த சிறிய முயற்சியாயினும், அது போலியோ இல்லாத உலகை நோக்கி எங்களை ஒரு படி அருகே கொண்டுசெல்லும்,” என்றார்.
ரோட்டரியின் End Polio Now திட்டம், உலகளாவிய முயற்சிகளில் ஒன்றாகும். இதன் மூலம் இதுவரை 2.5 பில்லியன் குழந்தைகள் தடுப்பூசி பெற்றுள்ளனர். ரோட்டரி மாவட்டம் 3234 நடத்திய இந்த நகரளாவிய நிகழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சமூக விழிப்புணர்வு எவ்வாறு நிலையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.













; ?>)
; ?>)
; ?>)