2025″ம் ஆண்டுக்கான உலக புகையிலை எதிர்ப்பு தினம் – புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொகுப்பை வெளியிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர்..!
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் கலந்து கொண்டு, இதனை வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் குகன் கூறியதாவது.
இன்று, மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்களிடம் உள்ள புகையிலை பழக்கத்தை கைவிட வேண்டிய அவசியம் குறித்தும், புகையிலை பயன்பட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அவர்களிடம் எளிதில் எடுத்துரைக்கும் விதமாக, புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய தலைப்புகளில் 30 ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது அவற்றை மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்து வைத்ததாக தெரிவித்தார்.
முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறியதாவது
இன்று சமுதாயத்தில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய நெடுங்கால பாதிப்புகள் பற்றி எடுத்துரைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. புகையிலை பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயம் அதிகரித்து உள்ள காலத்தில், இப்படிப்பட்ட புது முயற்சிகள் பொதுமக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும் என தெரிவித்தார்.
இந்த முயற்சியை எடுத்த ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் வரவேற்புரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.








