• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் “உலக தாய்மொழித் திருநாள்”

ByKalamegam Viswanathan

Feb 22, 2025

மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில்  கல்லூரியின் ஒளி, ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம் நடைபெற்றது.  தமிழ்த்துறைத் தலைவர்(பொ) முனைவர் கு.இராமர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த  மற்றும் கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆகியோரின் ஆசியுடன், தமிழ்த்துறை உதவிப்
பேராசிரியர் முனைவர் கோ.பாலமுருகன் ‘தாய்மொழிக் கல்வியின் தேவை’ என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ரெ.சுதாகர் வடிவேலு ‘தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்புகளும்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர். இந்நிகழ்விற்கு, முனைவர் சு.முத்தையா நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கு.பிரபாகரன் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.