சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்களின் வழிகாட்டலின் படி புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பாவை பவுண்டேஷன் சார்பில் உலக சமுதாய சேவா சங்கம் Sky யோகா அமைப்பின் பேராசிரியர்கள் முத்துக்குமரேசன் குருமூர்த்தி தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு யோகா பயிற்சிகள் உடற்பயிற்சி நின்ற நிலை ஆசனம் மதுர ஆசனம் மூச்சு பயிற்சிகளும் தியானங்கள் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் ஜானகிராம் மற்றும் இன்ஸ்பெக்டர் அறிவழகன் பாவை பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் சத்யபிரியா மற்றும் காவல் அதிகாரிகள் 150 க்கும் மேற்பட்டோர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டனர்.