• Fri. Apr 26th, 2024

உலகத் தாய்ப்பால் தினம்..!!!

Byகாயத்ரி

Aug 1, 2022

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலகத் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழு நாட்களை தாய்ப்பால் விழிப்புணர்வு தினமாக அனைத்து கிராம பகுதிகளிலும் நகரப்புறங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர் முது முனைவர் அழகுராஜா பழனிச்சாமி.

தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் உணவு. இணையற்ற சிறப்பு உணவு தாய்ப்பாலின் சிறப்புகளை,தாய்மார்கள் அறியச்செய்யும் விதமாகவும், குழந்தைகளுக்கு அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுக்க வலியுறுத்துவார்கள். தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் “தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது – நீங்கள் தயாரா?’ என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு தாய்ப்பால் எனத் தலையில் அடித்துக் கதறுகிறது. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக்களமிறங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு. ஆரோக்கியமும் அறிவுக்கூறும் குழந்தைக்குக் கிடைக்கச் செய்யும் உயிர்ப்பாலான தாய்ப்பால், ஒவ்வொரு குழந்தையின் நாடித்துடிப்பு மற்றும் அவர்களின் உரிமை ஒவ்வொரு தாயின் தனிமனித கடமையாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *