• Fri. Jan 30th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பாக பயிற்சிப்பட்டறை.,

ByK Kaliraj

Jan 29, 2026

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பாக “ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுடன் இணைந்த இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்” (IOT Interfacing with Android) என்ற தலைப்பின் கீழ் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு மாணவி அஸ்விதா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் தலைமையுரை வழங்கினார்.

அவர்தம் தலைமையுரையில், ஆண்ட்ராய்டு மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க உதவும் எனவும் இந்தப் பயிற்சிப் பட்டறையானது மாணவர்களின் நலனுக்கவும், அவர்களுது அறிவும் திறனும் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் நடத்தப்படுகிறது எனக் கூறினார்.

துணைமுதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில் உட்பொதிக்கப்பட்ட அமைப்பு மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் இடையிலான வேறுபாடு, (IOT) இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் திட்டங்களை உருவாக்க தேவையான அம்சங்கள் மற்றும் திட்ட மேம்பாட்டு நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதுநகர், செந்திக்குமார் நாடார் கல்லூரி கணினிப் பயன்பாட்டியல் துறையின் உதவிப்பேராசிரியர் கணேஷ் கலந்து கொண்டார். உதவிப்பேராசிரியர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தனது சிறப்புரையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு முதலிடத்தையும், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் இரண்டாம் இடத்தையும் பெற்று நம் வாழ்வோடு பிணைந்த ஒன்றாக மாறி வருகிறது என்றார். உட்பொதிக்கப்பட்ட அமைப்பு மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் இடையிலோன வேறுபாடு பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் பொருள். சென்சார், இணையம், மைக்ரோகண்ட்ரோலர் போர்டு பற்றிய படங்களையும் அதற்குரிய விரிவான செயல் விளக்கங்களையும் கூறினார். பல்வேறு வகையான இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொடர்பான நடப்பில் இருக்கும் உதாரணங்களைக் கூறி அதற்கான நிரல்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில் நுட்பவியல் துறை மாணவர்கள் 98 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்வின் நிறைவாக, இளங்கலை தகவல் தொழில்நுட்பவியல் துறை மூன்றாமாண்டு மாணவி அடைக்கல ஷைனி நன்றியுரை வழங்கினார். விளைவுகள்

பயிற்சிப்பட்டறையின் மூலம் மாணவர்கள் உட்பொதிக்கப்பட்ட அமைப்பு (Embedded System) மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT) பற்றிய அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளை தெளிவாக அறிந்தி கொண்டனர்.

சென்சார்கள், மைக்ரோகண்ட்ரோலர்கள் மற்றும் நிரலாக்கம் பயன் படுத்தி நடைமுறை (Real time) இண்டர்வுக்ட் ஆஃப் திங்ஸ் தொடர்பான திட்டங்களை உருவாக்குவதற்கான அழப்படை அறிவைப் பெற்றனர்.