தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிருவாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தரம் உயர்த்தும்போது சுற்றியுள்ள ஊரகப் பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.
ஊராட்சிகளை நகர அமைப்புடன் இணைப்பதால் 100 நாள் திட்டம் போன்ற ஒன்றிய அரசு திட்டங்களை இழக்க கூடும். எனவே, அவர்களது கருத்துகளை கேட்டறிந்த பிறகே நகர அமைப்புகளுடன் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு,

871 ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளுடன் இணைக்க கருத்துகள் பெறப்பட்டன. ஆனால் மக்கள் ஆட்சேபனை தெரிவித்த காரணத்தால் 375 ஊராட்சிகளை மட்டுமே நகர்ப்புற அமைப்புகளுடன் இணைத்தோம்.
அவர்களுக்கும் 110 நாட்கள் காலக்கெடு வழங்கி கருத்துக்களை கேட்டறிந்த பிறகு தான், நகர்புறம் அமைப்புகளுடன் இணைத்தோம். தற்போது நகர்ப்புற அமைப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய ஊராட்சிகளாக இருந்த 375 பகுதிகளுக்கும் 2 ஆண்டுகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.