• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

Byகாயத்ரி

Dec 29, 2021

ஆடு ஒன்று மனித உருவத்தில் குட்டி ஈன்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஆடு வளர்க்கும் உரிமையாளரின் ஆடு ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றுள்ளது. புதிதாக பிறந்த ஆட்டுக் குட்டி வழக்கமான ஆட்டுக் குட்டி போல் இல்லை. மாறாக அந்த குட்டி மனித உருவத்தில் பிறந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித உருவத்தில் உள்ள குழந்தை போல குட்டி ஈன்றது. வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால் இல்லை. மேலும் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தது.

உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல் இருந்தது. ஆனால் இந்த ஆட்டுக் குட்டி பிறந்து சில நிமிடங்களில் இறந்து விட்டது. அது பிறந்த போது ஏதோ அதிசய பிறவி என்று தான் நினைத்தோம். ஆனால் அது இறந்து விட்டது என்று ஆடு வளர்க்கும் உரிமையாளர் கவலையுடன் கூறியுள்ளார்.