மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர்.
மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் அக்னி சட்டி நிகழ்ச்சியும், இரவு சக்தி கிரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், நேற்று புதன்கிழமை கிடா வெட்டு நிகழ்ச்சியும், இரவு மாவிளக்கு எடுத்து பெண்கள் ஊர்வலமும் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலத்துடன் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சேர்த்தாளி வேஷம் போட்டும் கலர் பொடிகளை முகத்தில் தூவியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சென்றனர். தொடர்ந்து வைகை ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை மேலக்கால் கிராம கமிட்டியினர் மற்றும் முதன்மைக்காரர்கள் செய்திருந்தனர்.

