தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை இப்படி தான் சட்ட ஒழுங்கு நிலைமை உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பாஜக மண்டல் அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கட்சி கொடி ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.மண்டல் அலுவலகம் பாஜக கட்சி கொடி வண்ணத்தில் முழுவதும் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன்.உலகத்திலேயே பெரிய கட்சி அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக. மாவட்ட கட்சி அலுவலகம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா சொல்லி உள்ளார். பாஜக கொள்கை அடிப்படையினை கொண்ட கட்சி.அனைவருக்கும் குடிநீர் திட்டம் , வீடுகட்டும் திட்டம் , இலவச கேஸ் இணைப்பு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்த கட்சி பாஜக தமிழக கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் கட்சி பாஜக.
இன்று திறந்து வைத்துள்ள கட்சி அலுவலகம் விரைவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற வேண்டும்2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.ஐ நா சபையில் தமிழ் மொழி குரல் ஒலித்துள்ளது தமிழ் கலாச்சார மையம் உலக நாடுகளில் பல நாடுகள் அமைந்துள்ளது.காங்கிரஸ் – திமுக தமிழ் மொழிக்கு செய்தவை என்ன தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு மீண்டும் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.

மீனவர்கள் நலனுக்காக அமைச்சரவை கொண்டு வந்தது மத்திய அரசு தான்அதிக நிதியை மீனவர்களுக்கு 40ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்சி மோடி ஆட்சிமீனவர்களுக்கு கடன் உதவி செய்து உள்ளது.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகள் இடையே தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தான் வருகின்றோம்.தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு மாறியதாக தெரியவில்லை.தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை இதுவாக தான் சட்ட ஒழுங்கு உள்ளது.