பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு கை குழந்தையோடு நள்ளிரவில் அழுது கொண்டே வந்த இரண்டு பெண்கள்
தங்களின் கணவர்களை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் விசாரணை என்று அழைத்து சென்றவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என காவல் நிலையத்தில் கைக்குழந்தையோடு கதறி அழுத சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பிருத்திகை வாசன். இவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முசிறியில் பிருத்திகைவாசன் அவரது மனைவி ஷாலினியோடு தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இன்று மாலை முசிறியில் உள்ள கிருத்திகை வாசன் வீட்டிற்கு வந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி முனையில் பிருத்திகைவாசனை பிடித்து விசாரணை செய்ய வேண்டும் என அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பிருத்திகை வாசனின் மனைவி ஷாலினியின் தோழி தஞ்சாவூரை சேர்ந்த ருஷ்பானா அவரது கணவர் சுபாஷ் மற்றும் மூன்று மாத கைக்குழந்தையோடு கடந்த ஒரு மாதமாக கிருத்திகை வாசன் வீட்டில் தங்கி தங்கியுள்ளனர்
பிரத்தியவாசனை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அப்போது வீட்டிலிருந்த சுபாஷையும் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்கு என்று அழைத்து சென்றுள்ளனர்
இதனால் செய்வது அறியாத தவித்த இரண்டு பெண்களும் முசிறியில் இருந்து நள்ளிரவில் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கைக்குழந்தையோடு வந்துள்ளனர்

காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் தங்களின் கணவர்களை பற்றி விசாரித்த போது, காவலர்கள் இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர் போலீசார் தான் தங்களின் கணவர்களை விசாரணை செய்ய வேண்டும் என கூறி அழைத்து சென்றனர் என போலீசாரிடம் கதறி அழுதனர்.
வாரண்ட் இருப்பதாக கூறிய அழைத்து சென்ற போலீசார் நீதிமன்றத்தில் ஆசர்ப்படுத்துவோம் என சொல்லி, இதுவரை நீதிமன்றத்தில் ஆசர்ப்படுத்தவில்லை. எனவே தங்களின் கணவர்களை நாங்கள் பார்க்க வேண்டும் கண்ணீர் மழுக கதறிய பெண்.