சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர் தனது மனைவி உஷாவுடன் சோழவந்தான் பகுதியில் இருந்து தனது சொந்த ஊருக்கு டூவீலரில் சோழவந்தான் பேட்டை அருகேசென்ற நிலையில் திடீரென அந்த வழியாக வந்த மதுரையில் இருந்து வத்தலகுண்டு செல்லும்அரசு பேருந்தில் தனது மனைவியை ஏற்றி விட முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ் மோதி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காலை 8 மணி அளவில் சொந்த ஊருக்கு மனைவியை பஸ் ஏற்றி விட வந்த கணவனின் கண் முன்னாலேயே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.