• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை இரும்பு ராடு கொண்டு தாக்குதல் மருத்துவமனையில் சிகிச்சை..

ByArul Krishnan

Mar 21, 2025

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள மேல்ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மேகராஜன் மனைவி கவிதா வயது 42 இவர் கழுதூரில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்
இன்று காலை வழக்கம் போல் மேல்ஆதனூரில் இருந்து தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் கழுதூர் நோக்கி செல்லும் போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தது கிடந்துள்ளார்.

அந்த வழியாக வந்தவர்கள் கவிதாவை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த ராமநத்தம் போலீஸ் இச்சம்பவம் குறித்து முன்விரோதம் காரணமா அல்லது கள்ளத்தொடர்பு காரணமாக என பல்வேறு கோணங்களில் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.