• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்-போலீசார் விசாரணை

ByKalamegam Viswanathan

Mar 10, 2025

மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்ற சம்பவதில், இருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார் என முதல் கட்ட தகவல் தெரிய வருகிறது.

தனிப்படை போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த பெண் பெயர் இந்திராணி (வயது 70), கணவர் நடராஜன் என்றும், வில்லாபுரம் மீனாட்சி நகரில் வசித்து வந்தாகவும் கல்வித்துறையில் வேலை பெற்று ஓய்வு பெற்றுள்ளார் என தெரிய வருகிறது.

இறந்த இந்திராணியின் தங்கை கிருஷ்ணவேணி (வயது 62) செல்லுாரில் வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி முதல் இந்திராணி காணவில்லை என அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை பகுதியில் கோணி சாக்கில் பெண் பிணமாக இருப்பதாக பொதுமக்கள் கூறியதை, அடுத்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்தனர்.

திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சந்தேகத்திற்குரிய இருவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் நகைக்காக கொலை செய்ததாக தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து இருவரிடமும் இந்திராணி கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.