• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி.

BySeenu

Mar 6, 2024

கோவை சாடிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (51). இவர் சாடிவயல் அருகே சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாடிவயலில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த பழனியம்மாள் மீது மோதியது. அப்போது காரில் வந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். படுகாயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார்.

சம்பவம் தொடர்பாக காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிமுக கொடி வண்ணத்தில் ஏ.எஸ்.எம் என்று எழுதிய காரை ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தி வந்தவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் விபத்து ஏற்படுத்திய பிறகு வாகனத்தை நிறுத்தி இடத்தில் சிசிடி காட்சிகள் உள்ளது. அதை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இல்லையென்றால் பிரேதத்தை வாங்க மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி நிலையில் காருண்யா காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது
அதே வேளையில் வாகனத்தை ஓட்டிய நபர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதை விசாரணை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்

வாகன விபத்தில் இறந்து பெண்ணுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். ஏற்கனவே தந்தை இறந்த நிலையில் தாயும் வாகன விபத்தில் உயிரிழந்தால் தற்போது ஆதரவின்றி தவித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.