நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி மூன்று பேர் காயம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விளாம்பட்டி பள்ளிவாசல் அருகே கோமணாம்பட்டியை சேர்ந்த தர்மா (வயது 42) என்பவரும் அவரது உடன்பிறந்த சகோதரி மீனா (வயது 48) என்பவரும் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வத்திபட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நத்தம் மேலமேட்டுப்பட்டியைச் சேர்ந்த மைதீன் பிச்சை (வயது 42) அவரது மனைவி அம்சு (வயது 38) என்பவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் 4 பேரும் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதில் கோமணாம்பட்டியைச் சேர்ந்த மீனா என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பலியானார்.
காயம் அடைந்த மூன்று பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தம்பியின் கண் முன்னே அக்கா இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.