மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே விநாயகபுரம் நான்கு வழி சாலையில் மதுரையில் இருந்து மேலூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த இந்துமலர் என்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிர் இழப்பு. மேலும் அவர்களது உறவினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் என மூன்று பேர் படுகாயத்துடன் மீட்கபட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் இந்துமலர்(45) ராஜாத்தி(60) ஹேமலதா(40) இவர்கள் அனைவரும் மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் தங்களது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக மதுரை வண்டியூரை சேர்ந்த அஜித்குமார் என்பவரின் ஆட்டோவில் மதுரையிலிருந்து வந்துள்ளனர். மேலூர் அருகே விநாயகபுரம் நான்கு வழி சாலையில் வரும்போது விநாயகபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்புறத்தில் ஆட்டோ பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே இந்துமலர் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் அஜித்குமார் மற்றும் ராசாத்தி, ஹேமலதா ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்புறம் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.