• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

முகநூலில் ஏற்பட்ட தவறான தொடர்பு காரணமாக, பெண் ஒருவர் அரசு மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (29) க.பெ. ரெங்கன் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஐஸ்வர்யா முகநூலில் ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதியை சேர்ந்த விஜய் (31) என்பவரிடம் திருமணம் ஆகாதவர் எனக் கூறி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் பார்க்க வந்த போது ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது விஜய்க்கு தெரிய வந்தது.


இதனையடுத்து விஜய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யாவை ஒப்படைத்துள்ளார். மேலும் கணவர் ரெங்கனுக்கு தகவல் தெரிவித்து அவரும் காவல் நிலையம் வந்துள்ளார். ஆனால் கணவருடன் செல்ல மறுத்துள்ளார்.

கணவர் ஏற்கனவே மனைவியை காணவில்லை என திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் திருச்செந்தூர் காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்த போலீசார், ஒரு நாள் இரவு மட்டும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பெண்கள் ஆலோசனை வழங்கும் மையத்தில் தங்க வைத்துள்ளர்.


இன்று அதிகாலையில் கழிவறையில் ஐஸ்வர்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.