• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

புவிஈர்ப்பு விசை பகுதிக்குள்
நுழைந்த ரிசாட்-2 செயற்கைகோள்..!

விண்ணில் ஏவிய 13 ஆண்டுகளுக்கு பிறகு ரிசாட்-2 செயற்கைகோள் புவிஈர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்தது.
கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி, பி.எஸ்.எல்.வி.-சி12 ராக்கெட் மூலம் ரிசாட்-2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் எடை வெறும் 300 கிலோ ஆகும். அதன் செயல்பாடுகளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள மல்டி ஆப்ஜெக்ட் டிராக்கிங் ரேடார் கண்காணித்து வந்தது. அதில் கிடைத்த தரவுகள், ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன. 13லு ஆண்டுகள் கழிந்த நிலையில், ரிசாட்-2 செயற்கைகோள், கட்டுப்பாடின்றி புவிஈர்ப்பு விசை பகுதிக்குள் மீண்டும் நுழைந்துள்ளது. அதில் எரிபொருள் எதுவும் மிச்சம் இல்லை. எனவே, எரிபொருளால் ஏற்படும் மாசுபாட்டுக்கோ, வெடிவிபத்துக்கோ வாய்ப்பு இல்லை. ரிசாட்-2 செயற்கைகோள், இந்திய பெருங்கடலில் இந்தோனேஷியா நாட்டின் ஜகார்தா அருகே விழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.