• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

100 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்யுமா விஜயின் வாரிசு?

ByA.Tamilselvan

Nov 1, 2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்திருக்கும் விஜய் படங்கள் வசூலில் சாதனைப் படைத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் அதிக வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற பெயரையும் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. இதை தமிழ், தெலுங்கு, மலையாளம் என Pan Indian திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் திட்டமிடுகிறார்.
மேலும் வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் மட்டும் அரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் நடந்துவருகிறது
வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 270 கோடி முதல் 280 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யும் என திரைத்துறையினர் உறுதியாக கூறுகின்றனர். இது விஜய் படங்களில் அதிக வியாபாரம் செய்த படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறனர். முதல்கட்டமாக தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் 50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்கும் வாங்கியுள்ளது. அதேபோல வாரிசு திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸை டி-சீரிஸுக்கு ரூ. 10 கோடி அளவில் விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் USA ரைட்ஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வாரிசு படத்தின் USA ரைட்ஸ் ரூ. 7.5 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.வாரிசு படம் மாஸ்டரைவிட 100 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் என திரைத்துறையினர் கணிக்கின்றனர்.