மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது. நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு, அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
ஊழல் தீர்ப்பில் இருந்து தப்பினாலும் மக்கள் தீர்ப்பிலிருந்தும், ஆண்டவன் தீர்ப்பிலிருந்தும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் 4.12 லட்சம் கட்டிடங்களைக் கொண்டு தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பதிலே 250 கோடிக்கு மேல அளவில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலுக்கு பின்புலமா இருப்பது யார்? என்பதுதான் மதுரை என்பதை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது.
தமிழ்நாட்டில் கோட்டை முதல் ஊராட்சி வரை கமிஷன், கலெக்சன் என்ற நிலை இருந்து வருவதை மக்கள் வேதனையோடு ஒவ்வொரு நாளும் கடந்து போவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சட்டசபையில் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் உள்ள மதுரையில் ஊழல் நடைபெற்றது. இது மதுரை மக்களுக்கு வேதனையாக உள்ளது. மதுரை மாநகராட்சியில் நடப்பாண்டில் கூட 1,480 கோடி பட்ஜெட் தாக்கல் செய்து, அதில் 370 கோடி சொத்துவரி காட்டப்பட்டுள்ளது. ஆனால் சொத்து உயர்வினால் கூடுதலாக 250 கோடி அளவில் வருமானம் வந்திருக்கும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக 4.12 லட்சம் மேற்பட்ட சொத்துவரி கட்டிடங்களில், 3 லட்சத்திற்கு மேலாக வணிக கட்டிடங்கள் உள்ளது. குறிப்பாக கடந்த 2022 முதல் வணிக கட்டணங்களுக்கு குடியிருப்பு கட்டணம் நிர்ணயம் செய்து, மிக பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலுக்கு அடித்தளமாக இருப்பது யார்?
இது கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மதுரை மாநகராட்சியில் 1,292 கோடியில் குடிநீர் திட்ட பணிகள், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலங்கள், தடுப்பணைகள், 30 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் என 5,000 கோடி அளவில் திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். மதுரையில் தற்போது சாலைகள் கூட மேம்படுத்தவில்லை .எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக உள்ளது.
தற்போது 250 கோடி உண்மை நிலை என்ன? மதுரையில் ஐந்து மண்டல தலைவர்களையும், இரண்டு நிலை குழு தலைவர்களையும் ராஜினாமா செய்ய சொல்லி திமுக கட்சி தலைமை உத்தரவிட்டு அவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்?
இதுவரை மதுரை மாநகராட்சி வரலாற்றிலே இப்படி ஐந்து மண்டல தலைவர்கள் ஊழலுக்காக, மக்கள் பணத்தை கையாடல் செய்தற்காக ராஜினாமா செய்த வரலாறு மதுரை மாநகராட்சியில் இதுவரை பார்த்தது இல்லை?
தற்போது எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு கழக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த அடிப்படையில் இன்றைக்கு நீதியரசர்கள், உயர்நிலை ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலே குழு அமைத்து உண்மையை வெளிகொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இந்த குற்றத்திற்கு பின்புலமாக இருக்கும் உண்மை குற்றவாளிகள் யார்? இது சாதாரணமாக நடைபெற்று இருக்கிற முடியாது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த குற்ற செயல்களில், ஊழலில் ஈடுபட்ட அதிகார வர்க்கத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மதுரை மக்களுடைய உண்மையான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆறிப்போன கஞ்சி பழைய கஞ்சி என்ற கிராமத்து பழமொழி போல இதை பழைய பிரச்சனை என்று கடந்து போய் விடுவார்களோ என்கிற கவலை மக்களுக்கு உள்ளது.
ஆகவே இந்த நிலையிலே உண்மை குற்றவாளிகள் உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும். உண்மை குற்றவாளிகளுக்கு சட்டரீதியான தண்டனைகளை பெற்று தர வேண்டும் என்பதுதான் மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆளுகிற கட்சி என்ற அந்த அதிகாரத்திற்குள்ளே இருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டால் நிச்சயமாக மக்கள் தண்டனையில் இருந்து அவர்கள் தப்ப முடியாது.
மதுரை மாநகராட்சியினுடைய முறைகேடு, ஊழலுக்கு என எந்த தீர்ப்பில் இருந்து இவர்கள் தப்பினாலும் மக்கள் தீர்ப்பிலிருந்தும், ஆண்டவன் தீர்ப்பிலிருந்தும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை அரசிற்கு வைக்கிறேன்.
மதுரை மக்களை காப்பாற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? அல்லது எப்போதும் போல கைவிட்டு விடுமா? என கேள்வி எழுப்பினார்.








