• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உடைப்பு ஏற்பட்ட தடுப்பணை சீர் செய்யப்படுமா?

நீலகிரிமாவட்டத்தில் கரியமலை தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் தண்ணீர் வீணாகிவருகிறது. தடுப்பணையை சரிய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரிய மலை பகுதியில் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த தடுப்பணை மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உடைந்து சிதலமடைந்தும் தண்ணீர் வீணாகி வருகிறது.மக்கள் அன்றாட பயன்படுத்தி வந்த குடிநீர் தடுப்பணை உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சேரும் சகதிகளும் நிறைந்து உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் தற்போது விநியோகப்படுத்தப்பட்டு வருகிறது

.மிகவும் கலங்கலாக வரும் தண்ணீர் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.தடுப்பணையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் முட்புதர்கள் மூடி பராமரிப்பின்றி உள்ளன ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்டு முட்புதர்களை அகற்றி சேதமடைந்த தடுப்பணைகளை மீண்டும் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கரியமலை ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்