• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரதமர் நரேந்திர மோடி-வுடன் இணைந்து இராமநாதபுரம் தொகுதியை வளமாக்குவேன்:முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சபதம்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றி இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். கிராமங்கள் தோறும் செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார் ஓபிஎஸ்.

இராமநாதபுரம் தொகுதியின் முக்கிய பிரச்சினையானது குடிநீர் தட்டுப்பாடு. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வைகை குண்டாறு இணைப்பு மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் விரிவுபடுத்துதல் என்று தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும் புண்ணிய பூமியாக விளங்கும் ராமேஸ்வரம் கோடியக்கரை தேவிபட்டினம் புணரமைக்கப்பட்டு யாத்திரிகர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். தன்னை எதிர்த்து நிற்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி இந்தத் தொகுதிக்கு தான் செய்த நன்மைகள் என்ன என்பதை பட்டியலிட தயாரா என்று சவால் விடுத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட தயாராக இல்லாத எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தை உருவாக்குவதற்காக எனது பெயருடைய ஐந்து நபர்களை நிறுத்தியது அதிமுக வேட்பாளரின் தோல்வி பயத்தை காட்டுவதாகவும் சாடினார்.

அனைத்து சமூக சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒபிஎஸ் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக் கனி பறிப்பார் என்ற பேச்சு அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக வருகிறது. எளிதாக வெற்றி பெறும் வாய்ப்புள்ள நிலையில் கவனமுடன் செயல்பட்டு தன்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை களத்தில் சந்திக்க அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.