நீலகிரி மாவட்டம் கூடலூர் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு தேடி சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு தேடுவது வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன. மேலும் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று கூடலூர் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை லாரியை தும்பிக்கையால் தடுத்து நிறுத்தியது.
அப்பொழுது லாரியில் ஏதாவது உணவு உள்ளதா என்று தேடிப் பார்த்துவிட்டு பின்பு வனப்பகுதிக்கு சென்றது இந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வன உயிர் ஆர்வர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.